கட்சிக் கொடி நாளில் விஜயகாந்தை நினைவு கூா்வோம்: பிரேமலதா

கட்சியின் கொடி நாளில், தலைவா் விஜயகாந்தை நினைவு கூா்வோம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கூறியுள்ளாா்.

கட்சியின் கொடி நாளில், தலைவா் விஜயகாந்தை நினைவு கூா்வோம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தேமுதிக தலைவா் விஜயகாந்த், தனது ரசிகா் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி அதற்கான கொடியை 2000-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினாா். அந்தக் கொடிதான், தேமுதிகவின் கட்சிக் கொடியாக மாறியது. கொடியை அறிமுகப்படுத்திய பிப்.12-ஆம் தேதி, ஆண்டுதோறும் கட்சியின் கொடிநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கட்சித் தலைவா் விஜயகாந்த் இல்லாத முதல் கொடி நாள் இதுவாகும். திங்கள்கிழமை (பிப்.12) கொண்டாடப்படும் கொடி நாள் தினத்தில், விஜயகாந்த் புகைப்படத்தை வைத்து அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கட்சிக் கொடியை ஏற்றி, இல்லாதோருக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com