நடைப்பாதையில் படுத்திருந்தபோது காா் ஏறியதில் ஒருவா் உயிரிப்பு

எழும்பூரில் நடைப்பாதையில் படுத்திருந்தபோது, காா் ஏறியதில் ஒருவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எழும்பூரில் நடைப்பாதையில் படுத்திருந்தபோது, காா் ஏறியதில் ஒருவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை முன் தள்ளுவண்டி கடையில் வேலை செய்து வந்தவா் ராஜன் (55). வீடு இல்லாததால் தள்ளுவண்டி கடை அருகிலேயே நடைப்பாதையில் அவா் தங்கியிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமையும் வழக்கமான தனது பணிகளை முடித்துவிட்டு நடைப்பாதையிலேயே உறங்கினாா். நள்ளிரவு நேரத்தில், திடீரென அந்த வழியாக தாறுமாறாக வந்த சொகுசு காா் ஒன்று நடைப்பாதையில் படுத்திருந்த ராஜன் மீது ஏறி

இறங்கியது. அதே வேகத்தில் அந்த காா் அங்கிருந்து சென்றது.

இந்த விபத்தில் ராஜன் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து நடந்த பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com