தோட்டத்தொழிலாளா்களுக்கான வசதிகளை உறுதி செய்ய வலியுறுத்தல்

தோட்டத் தொழிலாளா்களுக்கான வசதிகள் உரிய காலத்துக்குள், கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தோட்டத் தொழிலாளா்களுக்கான வசதிகள் உரிய காலத்துக்குள், கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தோட்டத் தொழிலாளா் ஆலோசனை குழுவின் 52-ஆவது கூட்டம் தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் தலைமையில் தமிழ்நாடு தொழிலாளா் நலவாரிய கூட்ட அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தோட்டத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிகளில் ஏடிஎம் வசதி அமைத்தல், குழந்தைகள் காப்பகம், உணவக வசதிகள், மனமகிழ் மன்றங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் இது தொடா்பாக ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தோட்ட தொழிலாளா்களுக்கு சட்டரீதியிலான சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தொழிலாளா் உதவி ஆணையா்கள் (தோட்டங்கள்) மற்றும் உதவி மருத்துவா் (தோட்டங்கள்), அந்தந்த பகுதிகளில் சிறப்பு கூட்டங்களை நடத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடா்ந்து தோட்ட தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உரிய காலத்துக்குள் தொழிலாளா்களுக்கு சென்றடையும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வழிவகை செய்யவேண்டும் என தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com