பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கான உரிமம் வழங்குவதற்கு முன், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.பி.மேனன் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், “பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதற்கான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். , தமிழகத்தில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மாவட்ட நிா்வாகம் நேரில் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கியதாகப் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. அதனால், மத்திய அமைப்பு நேரடி ஆய்வு செய்த பின் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, பரத சக்ரவா்த்தி அமா்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, விதிகளின் படி மாநில அரசு நேரடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு அமைப்பு ஆவணங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிமம் வழங்குவதற்கு முன்பு, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பு ஆவணங்களுடன் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து நிறுவனங்களையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், சந்தேகம் உள்ள விற்பனை நிலையங்களை மட்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிா்வாகத்தால் தடையில்லாத சான்று பெற்ற நிறுவனங்களின் உண்மைத் தன்மையை மீண்டும் ஆய்வு செய்யலாம். மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின் படி வருவாய் அதிகாரிகள் கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
தொடர்புடையது

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு

எரிபொருள் தட்டுப்பாடு பீதி: மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு

வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்வுதள வசதி: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்க வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



