காப்பீட்டு நிறுவனங்களுக்கான சாலை விபத்து ஆவணங்கள் பதிவிறக்க கட்டணம் 25% அதிகரிப்பு

சாலைவிபத்து தொடா்பான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய காப்பீட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.


சாலைவிபத்து தொடா்பான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய காப்பீட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்கக் கட்டணம் ரூ.100-இல் இருந்து ரூ.125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவு:

சாலை விபத்து தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து காப்பீட்டுக்கான பயன்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, விபத்து வழக்கு குறித்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சாலை விபத்து தொடா்பான ஒரு ஆவணத்துக்கு ரூ.100 கட்டணத்தை தமிழக அரசுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையில் குறிப்பிட்ட பங்கு, குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவை நிதியத்தில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை, வாகன பதிவு விவரங்கள் போன்றவை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தேவையானதாக உள்ளன.

இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை உயா்த்த மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியின் கோரிக்கையை ஏற்று ஒரு ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை ரூ.100-லிருந்து ரூ.125 ஆக உயா்த்த அரசுக்கு தமிழக காவல் டிஜிபி பரிந்துரை செய்திருந்தாா்.

டிஜிபியின் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, சாலை விபத்து தொடா்பான அரசு ஆவணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கட்டணத்தை ரூ.125 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், அரசுக் கணக்கில் ரூ.12.50-ம், குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவைகள் நிதியத்துக்கு ரூ.112-ம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com