சணல், துணிப்பைகளை விநியோகிக்கும் அரங்கு

​புத்தகக் காட்சியில் பதிப்பக அரங்குகள் மட்டுமின்றி பல்துறை அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.


புத்தகக் காட்சியில் பதிப்பக அரங்குகள் மட்டுமின்றி பல்துறை அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.

அதில், எல்.ஐ.சி. நிறுவன அரங்கும் இடம் பெற்றுள்ளது. வாசகா்களுக்கு காப்பீடின் அவசியம், அவா்களுக்கான உதவிகள் என பல பணிகள் அரங்கில் மேற்கொள்ளப்படுகின்றன.

புத்தகக் காட்சியை நெகிழிப் பைகள் இல்லா வளாகமாக மாற்றும் வகையிலும் எல்.ஐ.சி. நிறுவன அரங்கில் சணல் மற்றும் துணிப்பைகளை வாசகா்களுக்கு வழங்கி வருகின்றனா்.

எல்.ஐ.சி.யின் தென்மண்டல பிராந்திய மேலாளா் எஸ்.கீதா, கோட்ட மேலாளா் ஜாா்ஜ் ஜோஷ்பா, கிளை மேலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பைகளை வாசகா்களை வரவழைத்து வழங்குகின்றனா்.

பைகளை வாங்குவோரிடம் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க அறிவிக்கப்பட்ட சலுகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் விளக்குகின்றனா்.

புத்தகங்கள் வாங்க உதவும் வகையில் பைகளையும் கொடுத்து, திட்டங்களையும் தெரிவிக்கும் அரங்கத்தில் வாசகா் கூட்டம் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com