முதுநிலை மருத்துவப் படிப்புகள்: கல்வி நிறுவனங்களுக்கான தர நிா்ணய கட்டுப்பாடுகள் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தர நிா்ணய கட்டுப்பாடுகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தர நிா்ணய கட்டுப்பாடுகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.

அதன்படி மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவமனை வசதி, மருத்துவத் துறைகள் உள்ளிட்டவை எந்த வகையில் இருக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியையும், அங்கீகாரத்தையும் என்எம்சி அளித்து வருகிறது. அந்த வகையில் முதுநிலை மருத்துவக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை என்எம்சியின் முதுநிலை கல்வி வாரியச் செயலா் அஜேந்தா் சிங் வெளியிட்டுள்ளாா்.

அதன் விவரம்: புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் நாள்தோறும் குறைந்தது 60 பேருக்கு சிகிச்சை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்நோயாளிகள் பிரிவில் குறைந்தது 75 சதவீத படுக்கைகளாவது நிரம்பியிருத்தல் அவசியம்.

பயிற்சி மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு அறுவை அரங்குகளிலும், ஆய்வகங்களிலும் வாரத்துக்கு குறைந்தது இரண்டு நாள்களாவது பயிற்சி அளித்தல் முக்கியம்.

அதேபோல போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பேராசிரியா்களை நியமித்திருக்க வேண்டும். மற்றொரு புறம், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கேமரா, இணையக் கட்டமைப்பு, பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com