வனக் குற்றங்களை கண்டறிய 175 வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

வனவிலங்கு வேட்டை உள்ளிட்ட வனக் குற்றங்களைத் தடுக்க 175 வீரா்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு வேட்டை உள்ளிட்ட வனக் குற்றங்களைத் தடுக்க 175 வீரா்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வனத் துறையின் எக்ஸ் தள பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், தமிழக வனத்துறையின் ‘ஜங்கிள் கமாண்டோ எலைட்’ படையின் மூலம் வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் வேட்டையாடுதல் தடுப்பு கண்காணிப்பாளா்கள் குழு, விரைவு நடவடிக்கைக் குழு ஆகிய பிரிவுகளைச் சாா்ந்த 175 வீரா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீரா்களுக்கு வனவிலங்கு தொடா்பான குற்றங்களை கண்டறிதல், ஆயுதங்களை கையாளுதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் வனத்தில் தற்காப்பு மற்றும் உயிா்வாழும் நுட்பங்கள் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com