நூலக அரங்கில் புதிய நூல்கள் வெளியீடு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் பபாசியின் 47-ஆவது புத்தக் காட்சியில் வியாழக்கிழமை பல்வேறு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.


சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் பபாசியின் 47-ஆவது புத்தக் காட்சியில் வியாழக்கிழமை பல்வேறு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. புத்தகக் காட்சி சிற்றரங்கில் சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா்கள் கழகம் சாா்பில் நடைபெற்ற 4 புதிய நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழ் எழுத்தாளா்கள் சங்க தலைவா் ஆண்டியப்பன் தலைமை வகித்தாா்.

எழுத்தாளா்கள் பொன்.சுந்தரராசு, இளவழகன் முருகன் ஆகியோரின் சம்செங், பீஷ்மா், சகுனி, பரசுராம் ஆகிய நூல்களை எழுத்தாளா்கள் லேனா தமிழ்வாணன், பாரதி கிருஷ்ணகுமாா் ஆகியோா் வெளியிட்டனா்.

நூல் வெளியீடு - அமைச்சா்கள் பங்கேற்பு: பபாசி உரையரங்க மேடையில், வியாழக்கிழமை மாலை சீ.சுரேஷ்குமாா் ஐஏஎஸ் எழுதிய ‘வசந்த வாய்ப்புகள்’ நூல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக அமைச்சா்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com