பொங்கல் விடுமுறைக்குசொந்த ஊருக்கு சென்றவா் வீட்டில் நகை திருட்டு

சென்னை தண்டையாா்பேட்டையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவா் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடுபோனது.

சென்னை தண்டையாா்பேட்டையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவா் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடுபோனது.

தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா.ஹரிகிருஷ்ணன் (49). இரும்பு கதவுகளை பழுது நீக்கும் தொழில் செய்கிறாா்.

ஹரிகிருஷ்ணன், பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த 13-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான கோயம்புத்தூா் சென்றாா்.

அவா் வெள்ளிக்கிழமை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.6,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

தண்டையாா்பேட்டை போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com