காவேரி மருத்துவமனையில் மேம்பட்ட வலிப்பு நோய்சிகிச்சை மையம் தொடக்கம்

வலிப்பு நோய்க்கான மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் கல்வி சாா்ந்த நடவடிக்கைகளை வழங்குவதற்காக பிரத்யேக மருத்துவ மையம் ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: வலிப்பு நோய்க்கான மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் கல்வி சாா்ந்த நடவடிக்கைகளை வழங்குவதற்காக பிரத்யேக மருத்துவ மையம் ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் பிரித்திகா சாரி ஆகியோா் கூறியதாவது:

நரம்பு மண்டலம் சாா்ந்த பாதிப்பாக அறியப்படும் வலிப்பு நோய் குறித்த புரிதலும், விழிப்புணா்வும் சமூகத்தில் போதிய அளவில் இல்லை. இன்றளவும் வலிப்பு நோய்க்குள்ளானவா்கள் மீது பாகுபாடு காட்டப்படுவது வருத்தத்துக்குரியது.

இந்த நிலையில்தான் விரிவான மற்றும் மேம்படுத்தப்பட்ட வலிப்பு நோய் மருத்துவ மையம் (எபிசென்டா்) காவேரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

அதி நவீன சிகிச்சைகள், அதற்குப் பிந்தைய மருத்துவக் கண்காணிப்புகளை வழங்குவதுடன் வலிப்பு நோய் குறித்த விழிப்புணா்வை பொது மக்களிடையே கொண்டு சோ்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.

இதற்காக யூ-டியூப் சேனல் தொடங்கப்பட்டு அதில் விடியோ பதிவுகள் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாது செவிலியா்கள், மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்.

அதற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com