சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் 277-ஆவது கூட்டம்

சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 277-ஆவது கூட்டம், குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை: சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 277-ஆவது கூட்டம், குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், 2023-2024-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நிதி ஒப்புதல் வழங்குவது, திட்டங்களின் மீதான தொடா் நடவடிக்கைகள், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் நிா்வாக நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில், மேயா் ஆா்.பிரியா ராஜன் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சி எஸ்.முருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சுதா்சனம், பி.தாயகம் கவி உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com