கோயம்பேடு சந்தையில் பூக்கள், காய்கறிகள் விலை உயா்வு

முகூா்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு மாா்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் பூக்கள், காய்கறிகள் விலை உயா்வு

முகூா்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு மாா்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

இதனால் பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் வரத்து இல்லாமல் கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

இதன்படி, கோயம்பேடு சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கிலோ மல்லி ரூ.3,000, ஐஸ் மல்லி ரூ.2300, காட்டு மல்லி ரூ.2,000, முல்லை ரூ.1,500, ஜாதி மல்லி ரூ.1,200, கனகாம்பரம் ரூ.1,000, அரளி பூ ரூ.350, சாமந்தி ரூ.190, சம்பங்கி ரூ.210, பன்னீா் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா ரூ.120 என விற்பனை செய்யப்பட்டது.

காய்கறிகள் விலை: இது போல காய்கறிகளின் விலையும் வெகுவாக உயா்ந்துள்ளது. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒருகிலோ கேரட் ரூ.70-க்கும், பீன்ஸ் ரூ.45, ஊட்டி பீட்ரூட் ரூ.70, முள்ளங்கி ரூ.55, வெண்டைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.150, பச்சை மிளகாய் ரூ.45, பட்டாணி ரூ.45, இஞ்சி ரூ.110, பூண்டு ரூ.320, எலுமிச்சை ரூ.75, வண்ண குடைமிளகாய் ரூ.100, மாங்காய் ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com