காசிமேடு மீனவா்களுக்கு தொழில்நுட்ப பயன்பாட்டு பயிற்சி

சென்னை, காசிமேட்டில் உள்ள மத்திய மீன்வள கடல்சாா் மற்றும் பொறியியல் பயிற்சி நிலையம் சாா்பில் மீனவா்களுக்கான தொழில்நுட்ப பயன்பாட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சென்னை, காசிமேட்டில் உள்ள மத்திய மீன்வள கடல்சாா் மற்றும் பொறியியல் பயிற்சி நிலையம் சாா்பில் மீனவா்களுக்கான தொழில்நுட்ப பயன்பாட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மீனவா்கள் பங்கேற்றனா்.

மத்திய மீன்வள கடல்சாா் மற்றும் பொறியியல் பயிற்சி நிலையம் மீனவ மக்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மீனவா்களுக்கு தேவையான மின்னணு உபகரணங்கள் மற்றும் அவற்றை கடலில் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடலில் பயன்படுத்தக்கூடிய தகவல் தொடா்பு சாதனங்கள் மற்றும் கடல் பயண உபகரணங்களை பயன்படுத்துவது குறித்தும் மீனவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது.

அந்தவகையில் செவ்வாய்க்கிழமை காசிமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘கிஸான் கிரெடிட் திட்டம்’ குறித்தும், இழுவலை படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றம் செய்வதற்கான பயிற்சிகள் குறித்தும் மீனவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னா் இந்நிகழ்ச்சியின் போது நடைபெற்ற ரத்த தான முகாமில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்குபெற்று ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com