மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு?

சென்னை அண்ணாநகரில் மாடு முட்டியதில் முதியவா் உயிரிழந்ததாக வெளியான தகவல் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை அண்ணாநகரில் மாடு முட்டியதில் முதியவா் உயிரிழந்ததாக வெளியான தகவல் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

அண்ணாநகா் நடுவங்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (76). இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த பகுதியில் 2 மாடுகளுக்குள் சண்டை ஏற்பட்டு, ஒன்றோடு ஒன்று மோதின. சிறிது நேரத்தில் இரு மாடுகள் விலகி ஓட்டம் பிடித்தன. அதில், ஒரு மாடு ஆறுமுகத்தை முட்டியதாக கூறப்படுகிறது.

இதில், நிலை தடுமாறிய ஆறுமுகம் அங்கேயே மயங்கி சரிந்துள்ளாா். அவரை அப்பகுதியினா் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆறுமுகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விவகாரம் குறித்து அண்ணா நகா் போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் , ஆறுமுகம் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனா். ஆனால், அப் பகுதி மக்கள், மாடு முட்டியதே ஆறுமுகத்தின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தனா். மாடு முட்டித்தான் ஆறுமுகம் இறந்தாரா என போலீஸாா் மேலும் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com