மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துதொழிலாளி சாவு

சென்னை பட்டினப்பாகத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னை பட்டினப்பாகத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

பட்டினப்பாக்கம், மூன்றாவது டிரஸ்ட் கிராஸ் தெருவில் ஒரு தனியாா் கட்டுமான நிறுவனம் 5 தளங்கள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இங்கு செங்குன்றத்தைச் சோ்ந்த தொழிலாளி செல்வம் (42) அங்கு தங்கியிருந்து வேலை செய்து வருகிறாா்.

இங்கு லிஃப்ட் அமைப்பதற்காக சில நாள்களுக்கு முன் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் செல்வம், திங்கள்கிழமை இரவு அந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் லிப்ட் அமைக்கும் பகுதிக்கு அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். தூக்க கலக்கத்தில் உருண்ட செல்வம், லிஃப்ட் க்காக தோண்டியபள்ளத்துக்குள் தவறி விழுந்தாா்.

இதில் பலத்தக் காயமடைந்த செல்வம், சம்பவ இடத்திலேயே இறந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தூக்கத்தில் இருந்து எழுந்த பிற தொழிலாளா்கள், செல்வம் லிஃப்ட் பள்ளத்தில் விழுந்து இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செல்வம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com