தைப்பூசம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூச விழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயில் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தைப்பூசம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூச விழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயில் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வடபழனி முருகன் கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாட்டு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீா் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்கள் பலா் விரதமிருந்து அலகு குத்தி வந்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

மேலும், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், சென்னையில் உள்ள கந்தக்கோட்டம், குன்றத்தூா் முருகன் கோயில், மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, சிறுவாபுரி கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com