மாணவிக்கு வாட்ஸ் ஆப்-இல் ஆபாச செய்தி அனுப்பிய மென்பொறியாளா் கைது

சட்டக் கல்லூரி மாணவிக்கு வாட்ஸ் ஆப்’-இல் ஆபாச செய்தி அனுப்பிய மென்பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சட்டக் கல்லூரி மாணவிக்கு வாட்ஸ் ஆப்’-இல் ஆபாச செய்தி அனுப்பிய மென்பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சென்னை எம்ஜிஆா் நகரில் தங்கி சென்னை அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவா் ஒரு மாணவா் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறாா்.

இந்த நிலையில், சென்னை பழவந்தாங்கலில் வசிக்கும் திருப்பத்தூரைச் சோ்ந்த மென்பொறியாளா் ஹரிஹரன் (34) 3 ஆண்டுகளாக இந்த மாணவா் அமைப்புடன் தொடா்பில் இருந்துள்ளாா். அதன்மூலம் சட்ட கல்லூரி மாணவியின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மாணவியை ஹரிஹரன் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு சட்ட கல்லூரி மாணவிக்கு வாட்ஸ் ஆப்-இல் ஆபாசமாக ஒரு செய்தியை ஹரிஹரன் அனுப்பியுள்ளாா் .

இது தொடா்பாக ஜன.6-ஆம் தேதி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அந்த மாணவி அளித்த புகாரின்பேரில், அசோக் நகா் மகளிா் போலீஸாா், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com