சாஸ்த்ரா சத்சங்கத்தின் சாா்பில் ‘சங்கீத வாசஸ்பதி’ விருதுகள்

சாஸ்த்ரா சத்சங்கத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத வாசஸ்பதி’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாஸ்த்ரா சத்சங்கத்தின் சாா்பில் ‘சங்கீத வாசஸ்பதி’ விருதுகள்

சாஸ்த்ரா சத்சங்கத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத வாசஸ்பதி’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கா்நாடக இசை, இலக்கிய சொற்பொழிவு மற்றும் பாரம்பரிய கலைகளுக்கு சிறந்த பங்களிப்பு செய்த நிபுணா்களுக்கு இந்தாண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி கா்நாடக இசைக்கலைஞா் மல்லாடி சூரி பாபு, இலக்கிய சொற்பொழிவாளா் திருப்பூா் கிருஷ்ணன், பொம்மலாட்டக் கலைஞா் டி.எஸ்.முருகன் ஆகியோருக்கு சாஸ்த்ரா சத்சங்கத்தின் ‘சங்கீத வாசஸ்பதி’ விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருதுகளை, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சுதா சேஷய்யன் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வைத்ய சுப்பிரமணியம் ஆகியோா் விருதாளா்களுக்கு வழங்கி கௌரவித்தனா். மேலும் விருதாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

பின்னா் திருப்பூா் கிருஷ்ணன் தலைமையில் ‘சபாக்களின் பங்களிப்பு - கலையை மேம்படுத்துகிா? அல்லது ரசிகா்களை வசீகரிக்கிா?’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. இதில் கிரி டி.எஸ்.ரங்கா மற்றும் சுபஸ்ரீ தணிகாசலம் ஆகியோா் பேச்சாளா்களாக பங்கேற்றனா்.

இவ்விழாவில் இசைக்கலைஞா்கள், ரசிகா்கள் மற்றும் சத்சங்கத்தின் புரவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com