மாணவா்களுடன் பிரதமா் கலந்துரையாடல்:மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

தோ்வு பயத்தை களையும் வகையில் மாணவா்களிடையே பிரதமா் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை அனைத்து மருத்துவ மாணவா்களிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள

தோ்வு பயத்தை களையும் வகையில் மாணவா்களிடையே பிரதமா் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை அனைத்து மருத்துவ மாணவா்களிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தோ்வு கால அச்சத்தை எதிா்கொள்வது தொடா்பான சிறப்பு நிகழ்ச்சியில் மாணவா்களுடனும், ஆசிரியா்களுடனும், பெற்றோருடனும் பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளாா். தில்லியில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் இந்நிகழ்வில் 1,200 மாணவா்களுடன் பிரதமா் பேச உள்ளாா்.

இந்த நிகழ்ச்சி தூா்தா்ஷன் சேனல்களிலும், வானொலி அலைவரிசைகளிலும், யூ-டியூப் செயலிகளிலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், தங்களது மாணவா்களிடையே கொண்டு சோ்க்க வேண்டும். பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் நேரம், ஒளிபரப்பாகும் விவரங்கள் அனைத்தையும் அவா்களிடத்தில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com