‘மணலி சிபிசிஎல் பாலிடெக்னிக்கில்விரைவில் சூரிய மின் உற்பத்தி நிலையம்’

மணலியில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 7 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திறன் உற்பத்தி நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
‘மணலி சிபிசிஎல் பாலிடெக்னிக்கில்விரைவில் சூரிய மின் உற்பத்தி நிலையம்’

மணலியில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 7 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திறன் உற்பத்தி நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) இயக்குநா் அரவிந்த் குமாா் தெரிவித்தாா்.

75 -ஆவது குடியரசு தின விழா மணலியில் உள்ள சிபிசிஎல் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆலையின் மேலாண்மை இயக்குநா் அரவிந்த் குமாா் தேசியக் கொடியை ஏற்றியதுடன், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் அரவிந்த் குமாா் பேசியதாவது: மணலில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுமாா் 7 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

வங்கதேசம், நமீபியா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் நாப்தாவை சிபிசிஎல் நிறுவனம் முதல் முறையாக ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கிழக்கு கடல்சாா் வழித்தடத்தில் ரஷிய துறைமுகங்களிலிருந்து கச்சா எண்ணெயை சென்னை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் முயற்சியில் சிபிசிஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தொழில்நுட்ப இயக்குநா் எச். சங்கா், நிதி இயக்குநா் ரோஹித் குமாா் அகா்வாலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com