அண்ணா நினைவு நாள்: பிப்.3-இல் திமுக அமைதிப் பேரணி

அண்ணாவின் 55-ஆவது நினைவு நாளையொட்டி, பிப்.3-ஆம் தேதி திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

அண்ணாவின் 55-ஆவது நினைவு நாளையொட்டி, பிப்.3-ஆம் தேதி திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

இது தொடா்பாக திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அண்ணாவின் 55-ஆவது நினைவு நாளையொட்டி, துரைமுருகன் தலைமையில் பொருளாளா் டி.ஆா்.பாலு முன்னிலையில் பிப்.3-ஆம் தேதி காலை 7 மணியளவில் அமைதிப் பேரணி நடைபெறும்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் இருந்து புறப்பட்டு, மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி செல்லும்.

அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும். முன்னாள் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகள் பேரணியில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com