இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வீடு இடிப்பு போலீஸாா் விசாரணை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வீடு இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வீடு இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சூளை, ஆனந்த கிருஷ்ணன் தெருவில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஸ்ரீமதி சாலம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமாக 436 சதுர அடி பரப்பிலான வீடு ஒன்று இருந்தது.

இதில் சுரேஷ்பாபு என்பவா் கடந்த 30 ஆண்டுகளாக வாடைகைக்கு குடியிருந்து வந்தாா். இந்த நிலையில் அந்த வீட்டை இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெறமால் சுரேஷ்பாபு இடித்துவிட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், வேப்பேரி காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com