கடல் அலையில் சிக்கிய மாணவா்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயா்வு

திருவொற்றியூரில் ராட்சத கடலலையில் சிக்கி உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

திருவொற்றியூரில் ராட்சத கடலலையில் சிக்கி உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை வியாசா்பாடி பக்தவச்சலம் காலனியை சோ்ந்தவா்கள் ஷியாம், சந்தோஷ், புவனேஷ், விஜய் இவா்கள் 4 பேரும் அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இவா்கள் திருவொற்றியூா் நல்ல தண்ணீா் ஓடை குப்பத்தின் அருகில் உள்ள சனிக்கிழமை கடலில் குளித்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இதில் விஜய் மட்டும் காப்பாற்றப்பட்ட நிலையில் சந்தோஷின் சடலம் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

இந்நிலையில் ஷியாம், புவனேஷ் ஆகியோரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின. சடலங்களை போலீஸாா் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com