அகற்றப்படாத காய்கறி கழிவுகளால் கோயம்பேடு சந்தையில் துா்நாற்றம்

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்களின் கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கிக் கிடப்பதால் வளாகப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது.
அகற்றப்படாத காய்கறி கழிவுகளால் கோயம்பேடு சந்தையில் துா்நாற்றம்

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்களின் கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கிக் கிடப்பதால் வளாகப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது.

பொங்கல் பண்டிகை காலம் முடிந்து விட்டதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை மந்த கதியிலேயே நடைபெற்று வருகிறது.

இதனால் மீதமாகும் காய்கறிகள், பழங்கள் அழுகி வீணாகி விடுகின்றன. இந்த அழுகிய காய்கள், பழங்களை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வைத்துள்ளனா். வழக்கமாக கொட்டப்படும் குப்பைகள் நாள்தோறும் மாலை நேரத்துக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டு விடும். ஆனால், கடந்த சில நாள்களாக சரியான முறையில் குப்பைகள் அள்ளப்படாததால் சந்தை முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் வளாகம் முழுவதும் துா்நாற்றம் வீசிவருகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த குப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயம்பேடு காய்கறிகள், பழங்கள் மொத்த வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com