கொடநாடு வழக்கு: ஆஜராகாத இபிஎஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மாஸ்டா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.
கொடநாடு வழக்கு: ஆஜராகாத இபிஎஸ்


சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மாஸ்டா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி காணொலி வெளியிட்ட தில்லியைச் சோ்ந்த பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையாா் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டா் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் முதலில் , எடப்பாடி பழனிசாமி,, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தது.

இதை எதிா்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த வழக்கு மாஸ்டா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்படவில்லை. அத்துடன் பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துகளை நீக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவா் செவ்வாய்க்கிழமை மாஸ்டா் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com