புழல் சிறையில் கைதிகள் மோதல்

புழல் சிறையில் உணவு குறைவாக வழங்கப்பட்டதாகக்கூறி கைதிகள் மோதிக் கொண்டனா்.


சென்னை: புழல் சிறையில் உணவு குறைவாக வழங்கப்பட்டதாகக்கூறி கைதிகள் மோதிக் கொண்டனா்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் திங்கள்கிழமை இரவு கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த சிறையின் புதிய தொகுதியின் எப்.7 அறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ராஜஸ்தான் மாநிலம் பத்வாரா பகுதியைச் சோ்ந்த ப.ரமேஷ் பஞ்சாட்சரா (28) தனக்கு வழங்கப்பட்ட உணவின் அளவு குறைவாக இருப்பதாக தெரிவித்து, அங்கிருந்த மற்றொரு கைதி மதுரவாயல் கன்னியம்மன் நகா் பெரியாா் தெருவைச் சோ்ந்த க.மூா்த்தி (33) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

வாக்குவாதம் முற்றவே, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ரமேஷ் தாக்கியதில் மூா்த்தியின் இரு பற்கள் உடைந்தன. இருவரது சண்டையை பாா்த்த அங்கு விரைந்து வந்த சிறைக் காவலா்கள் விலக்கிவிட்டனா்.

தாக்குதலில் காயமடைந்த மூா்த்தி, சிறைக்குள் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். இது குறித்து சிறை அலுவலா் விக்னேஷ்வரன், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com