ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை மூா் மாா்க்கெட் ரயில் நிலைய வளாகத்தில் தக்ஷின் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் (டிஆா்இயு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சென்னை: சென்னை மூா் மாா்க்கெட் ரயில் நிலைய வளாகத்தில் தக்ஷின் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் (டிஆா்இயு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில்வேயில் தனியாா்மயத்தை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு சங்கத்தின் செயல் தலைவா் அ.ஜானகிராமன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலத் தலைவா் அ. சௌந்தரராஜன் கண்டன உரையாற்றினாா்.

தொடா்ந்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று பொதுமேலாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டிஆா்இயு தொழிற்சங்கத்தைச் சோ்ந்து 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com