உருது பள்ளியில் புதிய கட்டடப் பணி அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புளியந்தோப்பு உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடப் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

சென்னை: புளியந்தோப்பு உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடப் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு போகிப்பாளையம் பகுதியில் உள்ள சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் புதிதாக பள்ளிக் கட்டடம் கட்டப்படவுள்ளது. தரைத்தளம், இரு தளங்களுடன் கூடிய 6 வகுப்பறைகளுக்கான பள்ளிக் கட்டடம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

இதற்கான பணிகளை அமைச்சா் சேகா்பாபு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வின் போது மேயா் ஆா்.பிரியா, மத்திய வட்டார துணை ஆணையா் கே. ஜே. பிரவீன் குமாா், நியமனக் குழு உறுப்பினா் சொ.வேலு, மண்டலக் குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com