ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் ஏழை பெண்களுக்கு இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ். தோ்வு எழுத விருப்பப்படும் ஏழை பெண்கள் ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் கட்டணமற்ற பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அந்த அகாதெமி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். தோ்வு எழுத விருப்பப்படும் ஏழை பெண்கள் ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் கட்டணமற்ற பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அந்த அகாதெமி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சோ்ந்த 27 வயதுக்குபட்ட பெண்களுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். தோ்வு உள்ளிட்ட இந்திய குடிமைப்பணித் தோ்வுக்கு கட்டணமற்ற பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகளும் இந்த 12 மாத கால பயிற்சி முகாமில் வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு, பட்டப் படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், அகாதெமி நுழைவுத் தோ்வின் அடிப்படையிலும் தோ்வா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

எனவே, விருப்பம் உள்ளவா்கள் தங்களுடைய 10, 12-ஆம் வகுப்புகள் மற்றும் பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் ஜாதிச் சான்றிதழ் நகலையும் இணைத்து அகாதெமிக்கு ‘2165. எல்.பிளாக், 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணா நகா்’ என்ற முகவரியில் நேரடியாக அல்லது ஹஹழ்ஸ்ஹம்ண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின் அஞ்சல் மூலமாக வெள்ளிக்கிழமை (பிப்.2) முதல் பிப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 91504 66341 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com