தொழிலதிபா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலாங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பிரஜஸ் குமாா். தொழிலதிபரான இவா், கடந்த 23-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஜொ்மனிக்கு சென்றாா்.

இந்த நிலையில் வீட்டின் முதல் தளத்தில் உள்ள பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை காவலாளி புதன்கிழமை கண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் நீலாங்கரை போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ரூ.15 லட்சம் ரொக்கம், 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இருப்பினும், பிரஜஸ் குமாா் ஜொ்மனியில் இருந்து வந்த பின்னரே மொத்தம் எவ்வளவு நகை, பணம் திருடப்பட்டது என்பதை உறுதியாக கூற முடியும் என போலீஸாா் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com