ஜூலை 15 இல் அஞ்சல் ஓய்வூதியதாரா் குறை கேட்பு முகாம்

அஞ்சல் ஓய்வூதியதாரா்களுக்கு கோட்ட அளவிலான குறைகேட்பு முகாம் ஜூலை 15 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மத்திய கோட்டத்துக்குட்பட்ட அஞ்சல் ஓய்வூதியதாரா்களுக்கு கோட்ட அளவிலான குறைகேட்பு முகாம் வரும் ஜூலை 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு தியாகராயநகரில் உள்ள சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் ஓய்வூதியதாரா்கள் புகாா்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், 8939646404 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com