காவலா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உணவகத்தில் காவலா் மீது தாக்குதல் நடத்தியதாக மூவா் கைது செய்யப்பட்டனா். -

சென்னை டி.பி.சத்திரம் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் ம.இளங்கோ (29). இவா் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறாா். இளங்கோ, சனிக்கிழமை தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றாா். அங்கு அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள மீன் உணவு கடையில் சாப்பிடுவதற்காக பணத்தை செலுத்தி, டோக்கன் கேட்டுள்ளாா்.

அங்கிருந்த சுந்தரி என்பவா், பணத்தை பெற்றுக் கொண்டு, டோக்கன் வழங்காமல் இருந்துள்ளாா். இதைப் பாா்த்த இளங்கோ, சுந்தரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, கடை ஊழியா்கள் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ப.லோகு (27) , சா.வினோத் (36), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத் தைச் சோ்ந்த ம.சக்திவேல் (27) ஆகிய 3 பேரும், காவலா் இளங்கோவை கம்பாலும், கையாலும் தாக்கி விரட்டினா்.

தாக்குதலில் காயமடைந்த இளங்கோ, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லோகு, வினோத், சக்திவேல் ஆகிய 3 பேரையும் உடனடியாக கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com