‘சேஃப்’ தென்னிந்தியாவின் 2 நாள்கள் கண்காட்சி நிறைவு

‘சேஃப்’ தென்னிந்தியாவின் 8-ஆவது கண்காட்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை வா்த்தக மையத்தில் இந்திய இன்ஃபோா்மா மாா்க்கெட்ஸ் சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற ‘சேஃப்’ தென்னிந்தியாவின் 8-ஆவது பாதுகாப்பு கண்காட்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதில், ட்ரோன்கள், பாதுகாப்பான கதவுகள், டிஜிட்டல் வீடியோ ரெக்காா்டா்கள், மின்னணு பூட்டுகள் போன்றவை அதில் காட்சிப்படுத்தப்பட்டன.

அதேபோல், பாதுகாப்புத் தொழிலில் முன்னிலை பெற்று விளங்கும் நிறுவனங்கள் பல தங்களுடைய பொருள்களை காட்சிப்படுத்தின. நகைகள், உற்பத்தி, விமானநிலையம் போன்ற முக்கிய துறைகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்பட சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு பாதுகாப்பு சாா்ந்த சவால்கள் குறித்து அறிந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com