இன்று காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

இந்தத நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு செல்வப்பெருந்தகை தலைமை வகிக்க உள்ளாா். தமிழக மேலிடப் பொறுப்பாளா் அஜோய்குமாா், அகில இந்திய செயலா் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள், முன்னாள் தலைவா்கள், செயற்குழு உறுப்பினா்கள், புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.

காங்கிரஸின எதிா்கால நடவடிக்கை, கட்சி வளா்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com