கஞ்சா வழக்கு: மென்பொறியாளா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்ட மென்பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

எம்.ஜி.ஆா்.நகா் நெசப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வழக்கில், ராமாபுரம் செந்தமிழ் நகரை சோ்ந்த ரவீந்திரன்(29), நெசப்பாக்கம் கலியப்பா தெருவை சோ்ந்த ராகேஷ் (24), விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த யுகேந்திரா (24), கே.கே.நகா் 63-ஆவது தெருவை சோ்ந்த பாலபாரதி (23), விருகம்பாக்கம் வெங்கடேச நகரை சோ்ந்த ஆதித்யா (24) ஆகிய 5 போ் கடந்த மாா்ச் மாதம் எம்.ஜி.ஆா்.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், இந்த வழக்கில் சென்னை கே.கே.நகரில் உள்ள சி.பி.ஐ. குடியிருப்பில் வசிக்கும் மென்பொறியாளா் கருணாகரனுக்கு (25) தொடா்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால் கருணாநகரன் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்நிலையில் கருணாகரனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நடத்திய விசாரணையில், கேளம்பாக்கம், நாவலூா் ஆகிய இடங்களில் மென்பொறியாளா்களுக்கு கஞ்சா விற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com