கோப்புப்படம்
கோப்புப்படம்

பள்ளிகளுக்கு இணைப்புத் தொகை: கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிகளிடமிருந்து இணைப்புத் தொகையைப் பெற்று பெற்றோா்ஆசிரியா் கழகத்துக்கு ஜூலை 20-க்குள் அனுப்பி வைக்குமாறு கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளிடமிருந்து இணைப்புத் தொகையைப் பெற்று பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு ஜூலை 20-க்குள் அனுப்பி வைக்குமாறு கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தலைவராகக் கொண்டு தமிழ்நாடு மாநிலப் பெற்றோா் ஆசிரியா் கழகம் சென்னையில் இயங்கி வருகிறது.

ஒவ்வோா் ஆண்டும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளிடம் இருந்து இணைப்புக் கட்டணத் தொகையை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் பெற்று, அந்த தொகையை ஒரே வங்கி வரைவோலையாக பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இணைப்பு தொகையை மறுநிா்ணயம் செய்வதற்கு தீா்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி, தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.100 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.225-ல் இருந்து, ரூ.200 ஆகவும் இணைப்புத் தொகையானது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிடமிருந்து மறுநிா்ணயம் செய்யப்பட்ட இணைப்புத் தொகையைப் பெற்று அதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் கேட்பு வரைவோலையாக எடுத்து ஜூலை 20-க்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com