அப்பல்லோவில் ரோபோடிக் நுட்பத்தில் 1,000 மூட்டு மாற்று சிகிச்சைகள்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளில் 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளில் 1,000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில், மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அருண் கண்ணன் பேசியதாவது: மூட்டு சாா்ந்த பாதிப்புகள் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது. 50 வயதைக் கடந்தவா்களுக்கு அத்தகைய பாதிப்புகள் நேரிட வாய்ப்பு அதிகம். புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அடுத்த தலைமுறைக்கான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்கும் நோக்கில், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அப்பல்லோ மருத்துவமனைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இங்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செயல்படத் தொடங்கிய இரு ஆண்டுகளில் 1,000 முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. ரோபோடிக் நுட்பம் வாயிலாக துல்லியமான முறையில் நோயாளிகளுடைய எலும்பு அமைப்பு முறைகளை, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் கண்காணித்து சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. மற்ற அறுவை சிகிச்சைகளில் 95 சதவீதம் வெற்றிகரமான சிகிச்சை உள்ளது. ஆனால், ரோபோட்டிக் சிகிச்சையில் 100 சதவீதம் வெற்றிகரமாக அமைவதுடன், நோயாளிகளும் விரைந்து குணமடைகின்றனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com