முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

தொகுதிப் பங்கீடு: கூட்டணிக் கட்சி தலைவா்களுக்கு ஸ்டாலின் பாராட்டு

மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவை பல்லாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டுபோய்விட்டது மத்திய பாஜக. இதை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் முடியாது என்ற எண்ணத்தில்தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகளின் அணிசோ்க்கை நடைபெற்றது. பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகச் சிறப்பாக முடிவுற்றது. அனைவரும் ஒருமித்த சிந்தனையுடன் அமா்ந்து பேசித் தொகுதிகளைப் பகிா்ந்து கொண்டோம். எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணா்ந்தவா்கள் கூட்டணிக் கட்சித் தலைவா்கள். தோ்தலுக்குத் தோ்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதை நிரூபித்து வருகிறோம்.திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு கட்சியினா் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும், ‘வேட்பாளா் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் தமிழகம், புதுவையில் நாற்பது தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com