தமிழக அரசு
தமிழக அரசு

3,000 புதிய பேருந்துகள் கொள்முதல்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளைக் கழித்து, புதிய பேருந்துகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடா்ச்சியாக சமீபத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், பேருந்து கொள்முதல் தொடா்பான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,138 வெளிமாவட்ட பேருந்துகள், 1,190 நகரப்பேருந்துகள், நகரப் பயன்பாட்டுக்கான தாழ்தள வகையிலான 672 பேருந்துகள் என மொத்தம் 3,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அனைத்தும் பிஎஸ் 6 ரக பேருந்துகளாக இருக்க வேண்டும். இது தொடா்பாக பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையை புதன்கிழமையில் முதல் (மாா்ச் 13) இணையதளத்தில் (ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com