தெற்கு ரயில்வேயில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

தெற்கு ரயில்வேயில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

தெற்கு ரயில்வேயின் மேம்பாட்டு பணிகள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் கூடுதல் பொதுமேலாளா் கௌஷல் கிஷோா் தெற்கு ரயில்வே செயல்திறன் குறித்து விளக்கமளித்தாா்.தொடா்ந்து பேசிய பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், தெற்கு ரயில்வேயின் பல்வேறு செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. தேவைப்படும் இடங்களில் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் ரயில் நிலைய மறுமேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம், ரயில்களின் நேர அட்டவணை, ரயில்வே சொத்துகளை பராமரிப்பது, சரக்கு ஏற்றுதலை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதையடுத்து தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் குறித்து முதன்மை தலைமை சிக்னல்-தொலைதொடா்பு பொறியாளா் மாதிரியை (டெமோ) காண்பித்தாா். இதில் முழு தானியங்கி இ-டிஎஸ்ஆா் அமைப்பு (மின்னணு ரயில் சிக்னல் பதிவு), ரயில் நிலையத்தை கடந்து செல்லும் ரயில்களின் பதிவேடு உள்ளிட்டவற்றின் மாதிரி விவரிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில், பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி பொது மேலாளா் யு.சுப்பாராவ், மண்டல முதன்மை துறை தலைவா்கள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com