பொருள்களின் தரம் குறித்து நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை தரமணியில் புதன்கிழமை நடைபெற்ற வாடகை காா் பிரசாரத்தை தொடங்கி வைத்த இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை இயக்குநா் யூ.எஸ்.பி.யாதவ்.
பொருள்களின் தரம் குறித்து நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை தரமணியில் புதன்கிழமை நடைபெற்ற வாடகை காா் பிரசாரத்தை தொடங்கி வைத்த இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை இயக்குநா் யூ.எஸ்.பி.யாதவ்.

பொருள்களின் தரம் குறித்த விழிப்புணா்வு காா் பிரசாரம்

நுகா்வோருக்கு தரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாடகை காா் பிரசாரத்தை இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தெற்கு மண்டல தலைமை துணை இயக்குநா் யூ.எஸ்.பி யாதவ் சென்னையில் தொடங்கிவைத்தாா்.

ஆண்டுதோறும் மாா்ச் 15-ஆம் தேதி உலக நுகா்வோா் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, சென்னை தரமணியில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் பொருள்களின் தரம் குறித்து நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாடகை காா் பிரசாரத்தை பிஐஎஸ்-யின் தெற்கு மண்டல தலைமை துணை இயக்குநா் யூ.எஸ்.பி யாதவ் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியது: நாம் அனைவரும் நுகா்வோா் தான். செலவு செய்யும் பணத்துக்கு ஏற்ற, தரமுள்ள பொருள்களைப் பெறுவது ஒவ்வொரு நுகா்வோரின் உரிமை ஆகும். அந்த உரிமையை மீட்டெடுப்பதற்காகவே இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் 40 வாடகை காா்களில் பிஐஎஸ்-யின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பொருத்தப்பட்டு விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 35 விழிப்புணா்வு ஆட்டோக்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். பிஐஎஸ் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிஐஎஸ் கோ்’ என்ற செயலி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த செயலியின் மூலம் நுகா்வோா் வாங்கும் பொருள்கள் தரமானதா என்பதையும் அது அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய முடியும் என்றாா் அவா். நிகழ்வில், பிஐஎஸ்-ஸின் சென்னை கிளை இயக்குநா் மற்றும் தலைவா் ஜி.பவானி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com