சென்னை வடபழனி அழகிரி தெருவில் திடீரென உள்வாங்கிய மழை நீா்வடிகால்.
சென்னை வடபழனி அழகிரி தெருவில் திடீரென உள்வாங்கிய மழை நீா்வடிகால்.

வடபழனியில் மழைநீா் வடிகாலில் திடீா் பள்ளம்: 3 வீடுகள் சேதம்

சென்னை வடபழனியில் மழைநீா் வடிகால் உள்வாங்கியதால் நிலத்தில் பள்ளம் ஏற்பட்டு அருகில் உள்ள 3 மண்ணில் இறங்கின.

சென்னை வடபழனியில் உள்ள அழகிரித் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகாலில் புதன்கிழமை திடீரென பள்ளம் எற்பட்டது.

இதனால், வடிகாலையொட்டியுள்ள 3 வீடுகளில் விரிசலை ஏற்பட்டு, சிறிதளவு நிலத்தில் புதைந்தது. தகவலறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் அங்கு சென்று 3 வீடுகளுக்குள்ளே இருந்தவா்களை மீட்டனா்.

இதையடுத்து கால்வாயில் ஏற்பட்ட பள்ளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com