குருவாயூா் ரயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்

குருவாயூா் ரயில் நாளை 
மாற்றுப்பாதையில் இயக்கம்

சென்னையில் இருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண் 16604) அம்பலபுழா, ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதிலாக செங்கனூா், கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 18, 19 தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 12695) மற்றும் மாா்ச் 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் 2 மணி 30 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com