சூதாடிய 20 போ் கைது: ரூ.3 லட்சம் பறிமுதல்

தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியாா் கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியாா் கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.3.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை நரசிம்மன் 2-ஆவது தெருவில் அமைந்துள்ள ஒரு தனியாா் கிளப்பில் சிலா் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்ற தேனாம்பேட்டை காவல் ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சீனிவாசன் (54), சந்திரசேகா் (48), கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சதிஷ் (39), தெலங்கானாவை சோ்ந்த வா்மா (58) உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.3 லட்சத்து, 20 ஆயிரத்து, 880 -ரொக்கத்தை காவலா்கள் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com