மீனவா்கள் கைது: பாமக, தமாகா கண்டனம்

தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாமக, தமாகா ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாமக, தமாகா ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அன்புமணி ராமதாஸ் (பாமக): தமிழக மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை அரசு இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.கே.வாசன் (தமாகா): இலங்கைக் கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com