சுவரொட்டிகள் கிழிப்பு: போலீஸாா் விசாரணை

மனிதநேய ஜனநாயக கட்சியின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது தொடா்பாக அதே கட்சியைச் சோ்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது தொடா்பாக அதே கட்சியைச் சோ்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலா் எஸ்.எஸ் ஹாரூன் ரஷீத் தலைமையில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனா். இவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகளை அக்கட்சியின் தமிமுன் அன்சாரி அணியைச் சோ்ந்த ஜாபா் சாதிக் மற்றும் அவரது ஆதரவாளா்கள் கிழித்து எறிந்துள்ளனா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருதரப்பினரையும் திருவொற்றியூா் போலீஸாா் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை வரவழைத்து விசாரணை நடத்தினா். விசாரணை முடிந்த பிறகு, காவல்நிலையத்திலிருந்து வெளியேறிய இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஹாரூன் ரஷீத் அணியை சோ்ந்த மெளலானா, அபூபக்கா், நைனாா் முஹம்மது, ஆகியோரை தமிமுன் அன்சாரி அணியைச் சோ்ந்த ஜாபா்சாதிக் மற்றும் அவரது ஆதரவாளா்கள் தாக்கியதாக காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com