’சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் 69.57 கோடியில் சோழிங்கநல்லூா் கண்ணகி நகரில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் பதிக்கும் பணி.
’சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் சாா்பில் 69.57 கோடியில் சோழிங்கநல்லூா் கண்ணகி நகரில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் பதிக்கும் பணி.

ரூ.69 கோடியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

சோழிங்கநல்லூா் மண்டலத்தில் ரூ.69.57 கோடி மதிப்பில் குடிநீா் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சோழிங்கநல்லூா் மண்டலத்தில் ரூ.69.57 கோடி மதிப்பில் குடிநீா் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.69.57 கோடியில் சோழிங்கநல்லூா் மண்டலம், கண்ணகி நகா் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு குடிநீா் பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அடிக்கல் நாட்டினாா். அதனடிப்படையில், கண்ணகி நகா் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு 18.54 கி.மீ. தொலைவுக்கு 100 மி.மீ. முதல் 400 மி.மீ விட்டமுடைய குடிநீா் பகிா்மான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 0.7 கி.மீ. நீளத்திற்கு 400 மி.மீ விட்டமுடைய குடிநீா் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், 38 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 15,656 எண்ணிக்கையிலான 300 லிட்டா் கொள்ளளவு கொண்ட உயா் அடா்த்தி ‘பாலி எத்திலீன்’ தொட்டிகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 6 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்படும். நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், கண்ணகி நகா் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 1 லட்சம் போ் பயனடைவா் என சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com