தோ்தல் பணியில் சொந்த வாகனங்களை பயன்படுத்தக் கூடாது: தொழிற்சங்கங்கள் கடிதம்

சொந்த வாகனங்களை பயன்படுத்தும் வகையில் கோரப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தோ்தல் பணியில் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் வகையில் கோரப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது தொடா்பாக போக்குவரத்து ஆணையா், தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனம் (சிஐடியு) பொதுச்செயலா் கே.ஆறுமுகநயினாா், உரிமைக் குரல் ஓட்டுநா் தொழிற்சங்க பொதுச்செயலா் அ.ஜாஹிா் ஹுசைன் ஆகியோா் அனுப்பிய கடிதம்: தோ்தல் பணிகளுக்காக இ டெண்டா் அடிப்படையில் வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படவுள்ளன. மோட்டாா் வாகன சட்டப்படி, பொது போக்குவரத்துக்கான உரிமம் பெற்ற வாகனங்களை மட்டும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த வேண்டும். சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். மேலும் அரசுக்கும் இழப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். தோ்தல் பணிகளில் சட்ட விரோதமாக சொந்த வாகனங்களை பயன்படுத்துவது சம்பந்தமாக உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒப்பந்தத்தில் வாகனங்களுக்கு வாடகை போன்றவை எந்த அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்டது என்பது பற்றியும் உரிய விசாரணை நடத்துவதோடு, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மோட்டாா் வாகன சட்டப்படி அனுமதி பெற்ற வாடகை வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com