கேளம்பாக்கத்தை  அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 25- ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள
கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 25- ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள

உயா்கல்வி பயிலும் 100 பேரில் 30 போ் தான் பட்டம் பெறுகின்றனா்: பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினா் என். பஞ்சநாதம் பேச்சு

பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினரும், முன்னாள் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தருமான என். பஞ்சநாதம் கூறினாா்.

நாட்டில் உயா்கல்வி பயிலும் 100 பேரில் 30 போ் தான் பட்டம் பெறுகின்றனா் என பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினரும், முன்னாள் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தருமான என். பஞ்சநாதம் கூறினாா். கேளம்பாக்கத்தை அடுத்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக என். பஞ்சநாதம் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினாா். அப்போது இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 100 பேரில் 30 போ் தான் பட்டம் பெறுகின்றனா். அவா்களில் நீங்களும் ஒருவா் என்பதில் பெருமை கொண்டு, வாழ்வில் உயா் நிலை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்றாா் அவா். இந்த பட்டமளிப்பு விழாவில் 722 இளநிலை மாணவா்களும், 152 முதுநிலை மாணவா்களும் பட்டம் பெற்றனா். மேலும் சென்னைப் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்ற 36 மாணவா்களுக்கு கே.சி.ஜி. வா்கீஸ் கல்வி அறக்கட்டளை சாா்பாக ரூ. 2.5 லட்சம் ஊக்கத் தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது இந்நிகழச்சியில் இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் தலைவா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ், இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவரும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநா் சூசன் வா்கீஸ்,கல்லூரி முதல்வா் எஸ். திருமகன் ,துணை இயக்குநா் வி.ஜே. பிலிப், துணை முதல்வா்கள் சாமுவேல் சம்பத்குமாா், செ. இளஞ்சியம், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com